சம்மாந்துறை ‘அல்மஸ்ரபுல் இஸ்லாமிய்யு’ கடன், வைப்புச் சேவை பற்றி ஸம் ஸம் பவுண்டேஷன் தயாரித்த ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு

அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு இஸ்லாமிய கடன், வைப்புச் சேவை கடந்த 25 வருடங்களாக சம்மாந்துறையில் இயங்கி வருகிறது. தற்போது கூட்டுறவுத் திணைக்களத்தின் ஊடாக அரச அங்கீகாரத்தை பெற்று நவீனமுறையில் சேவையாற்றி வருகின்றது.

வட்டியிலிருந்து சமூகத்தை பாதுகாப்பதோடு மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன் பொருளாதார கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கு கடன் வழங்கியும் பாரிய சேவை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அல்மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவின் பணிகளைப் பாராட்டி ஊக்குவிப்பதோடு அப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘அல்மஸ்ரபுல் இஸ்லாமிய்யு’ கடன், வைப்புச் சேவை பற்றி ஸம் ஸம் பவுண்டேஷன் இந்த ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டது.

கடந்த 2025.07.08ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 03:00 மணிக்கு அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிதி நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேந்திரன் அவர்களும் அவர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருமான எம்.சி ஜலால்தீன் அவர்களும் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விஜயம் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கியபோது