சங்கத்தின் கௌரவ தலைவர் ஐ.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சீ.ஜலால்டீன், தலைமை கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.நிஜாமுடீன், எஸ்.ஜாபீர், சங்கத்தின் கௌரவ இயக்குனர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது சங்கத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பு வழங்கி அண்மையில் மரணித்த மர்ஹும்களான எஸ்.ஏ.றாசிக், ஏ.எல்.அப்துல். ரசூல் ஆகியோருக்கான துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.










